10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு: பள்ளிகல்வித்துறை திட்டம்
கொரோனா 2ஆவது அலை காரணமாக காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு கட்டாயமில்லை என்று கூறியுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Rajarajan
on
20.4.21
Rating:


கருத்துகள் இல்லை