Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க



கொரோனா (Coronavirus) தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடுப்பூசி மையங்களுக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மும்பையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் துஷார் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தடுப்பூசி மையங்களுக்கு நாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்கிறோம். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தால், தொற்று பரவும் வாய்புள்ளது. தடுப்பூசியை மற்றும் செலுத்திக்கொள்வோம், தொற்றை பற்றிக்கொள்ள வேண்டாம்.


- முகக்கவசங்கள் (Facemask), கையுறைகள் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். முகத்தை அடிக்கடி தொடுவதையும், கைகுலுக்குவதையும் செய்ய வேண்டாம்.


- தொற்று பரவும் சாத்தியக்கூறுகளை குறைக்க இரண்டு மாஸ்க்குகளை அணியலாம்.


- கையுறைகளை பயன்படுத்தினாலும் அவற்றையும் சானிடைசர்கள் கொண்டு சானிடைஸ் செய்யவும்.


- பொதுவாக வெளியே எங்கு சென்றாலும், காபி, தேநீர் பருகுவதை தவிர்க்கவும். உங்களுக்குத் தேவையான நீரை பாட்டில்களில் எடுத்துச்செல்லவும், வெளியே குடிக்க வேண்டாம்.


இது தவிர, யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பது குறித்தும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்து நிறுவனங்கள் தரப்பில் ஃபாக்ட் ஷீட்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:


- ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்

- முதல் டோஸுக்குப் பிறகு எதிர்வினை இருந்தால், இரண்டாவது டோஸ் போட வேண்டாம்


- கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்.


- பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்.

தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க Reviewed by Rajarajan on 26.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை