நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய 1 லட்சம் பேர் கையெழுத்து!!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக்கோரி change.org இல் 1 லட்சம் பேர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல மாநில அரசுகள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளன. மேலும் சில பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த தேர்வுகள் மே மாதம் 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஆனால் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பொதுத்தேர்வு நேரடியாக நடத்தப்படக் கூடாது என மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக கோரிக்கை வைத்தனர். ஆனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் பதில் அளித்துள்ளது.
மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை
இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து change.org-யில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் 1 லட்சம் பேர் தேர்வுகள் நடத்தக்கூடாது என மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுவதால் அவர்களுக்கு அதிகமான மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அவர்களால் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை