இந்த மூன்று மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு தழுவிய பொதுமுடக்கம் மீண்டும் அறிவிக்கப்பட்டால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்படையும். இதனால் நோய் பாதிப்பு 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள 150 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கினை அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தின் 3 மாவட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் நோய் பாதிப்பு 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 4640, செங்கல்பட்டில் 1181, கோயம்புத்தூரில் 996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூரவ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்த மூன்று மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு
Reviewed by Rajarajan
on
28.4.21
Rating:
கருத்துகள் இல்லை