ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் வார இறுதி முடக்க நாட்களில் செயல்படாது - தெற்கு ரயில்வே
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இறுதி நாளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவைகளுக்கு கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, “தமிழகத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி வார இறுதி நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையங்கள் எதுவும் செயல்படாது. இருந்த போதிலும் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தே டிக்கெட் முன்பதிவு அல்லது ரத்து செய்து கொள்ளலாம். முன்பதிவு அல்லாத டிக்கெட் வழங்கும் மையங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை