மே 2ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கா? பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் பல்வேறு தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாகவே தற்போது வரை முழு ஊரடங்கு குறித்து தமிழக அரசு முடிவெடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் வருகிற மே 2ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் முழு ஊரடங்கு குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூரவ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை