Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!





தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மே 5 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தேர்வு நடைபெறும் போது முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. முன்னதாக மே மாதம் 3ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால், அன்றைய தினத்திற்கான மொழிப்பாடத் தேர்வு மே 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு நடைபெறும் போது தேர்வுகளில் எதுவும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த குழுக்களில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் போது பறக்கும் படையுடன் கல்வி அதிகாரிகள் சென்று பார்வையிடுவார்கள்.

இந்நிலையில் அந்த கண்காணிப்பு குழுக்களை நிர்வாகம் செய்ய 4 துறை ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடநூல் கழக தலைவர் ஜெயந்தி, டி.ஆர்.பி தலைவர் நிர்மலராஜ், சமக்ர சிக் ஷா மணிலா திட்ட இயக்குனர் லதா, உதவி திட்ட இயக்குனர் அமிர்தஜோதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.



12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!! 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!! Reviewed by Rajarajan on 13.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை