Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு





தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா பரவல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுப்பது என்பது குறித்து ஆய்வு நடத்த நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதன் முடிவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.


*இனி திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி


* ஷாப்பிங் மால்கள், கடைகளில் 50% மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதி.


* ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி.


* உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளருக்கு மட்டுமே அனுமதி


* உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11-00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.


* தமிழகத்தில் திருவிழா மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப் 10 முதல் தடை.


* இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம்.


* திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.


* உள் கூட்டங்கள் 200 பேர் மட்டுமே அனுமதி.


* கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி.


* அரசு தனியார் பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, சீட்டுகளில் மட்டுமே பயணிகள் அனுமதி.


*கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு தடை.


*மாவட்டச் சந்தைகளிலும் சில்லறை விற்பனைக்கு தடை.


* படபிடிப்பில் கலந்துக்கொள்பவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை.


*நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயலபட அனுமதி.


* முகக்கவசம், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களை அனுமதிக்க வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு உத்தரவு.


* சுற்றுலா தளங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதி.




தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு Reviewed by Rajarajan on 8.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை