Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (TET) வாழ்நாள் முழுவதும் செல்லும் – மத்திய கல்வி அமைச்சகம்!





மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்களில் ஆசிரியராவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) அவசியமாகும். சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராவதற்கு CTET தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் தொடக்கப் பள்ளி கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். மாநில கல்வி வாரியங்கள் மாநில ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துகிறது.

TET தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இருப்பினும் நடப்பு ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. 1 முதல் 6ம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கு முதல் தாளில் தேர்ச்சி பெற வேண்டும். 7 முதல் 12ம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதுவரை 2011 பிப்ரவரி 11ம் தேதி ஆண்டு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி, ஆசிரியர் தகுதி தேர்வின் சான்றிதழ் தேர்ச்சி பெற்றதில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை மேட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து. தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி) தகுதி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் இனி செல்லுபடியாகும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

Oதல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு இந்த அறிவிப்பினால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்றும், 2011 முதல் ஏழு ஆண்டுகளில் மதிப்பிழந்த சான்றிதழ்களை மீண்டும் மறு மதிப்பீடு செய்ய தேவையான நடவடிக்கைகளை மாநில மற்றும் யூனியன் அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (TET) வாழ்நாள் முழுவதும் செல்லும் – மத்திய கல்வி அமைச்சகம்! ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (TET) வாழ்நாள் முழுவதும் செல்லும் – மத்திய கல்வி அமைச்சகம்! Reviewed by Rajarajan on 4.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை