தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 2013, 2017, 2018 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் எனவும், இது குறித்து பள்ளிகள் திறக்கப்படும் போது அறிவிப்புகள் வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் தேர்வின் மூலம் பணியமர்த்தப்படுகிறார்கள். இதற்கென அரசு ஆசிரியர்கள் தேர்வாணையத்தின் மூலம் பணியிடங்கள் எண்ணிக்கையை பொறுத்து தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் பல வித குழப்பங்கள் நிலவுவதால் ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதிலும் சில சிக்கல்கள் நிலவுகிறது.
இந்த தேர்வாணையம் முறையாக செயல்படவில்லை என பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. TET தேர்வில் ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அந்த சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என இன்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால் பணியானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழங்கப்பட்டது. ஏராளமானோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2013, 2017, 2018 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அவர்களுக்கு பணி வழங்குவது பற்றி ஆலோசனைகள் நடத்தப்பட்டு உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்கும். கொரோனா பரவல் குறைந்த பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் பொழுது இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை