மாற்றுத்திறனாளி உடன் உதவியாளர் ஒருவரும் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம்
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் உடன் இருக்கும் உதவியாளர் ஒருவரும் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
இலவச பேருந்து சேவை:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றாக அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்தது. இந்த திட்டம் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக உள்ளது என பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து திருநங்கைகள் எங்களுக்கும் இலவச பேருந்து சேவை அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை ஏற்று திருநங்கைகளும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தினார். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டணமில்லா பேருந்து சேவை அளிக்கப்படுகிறது. அரசு பேருந்துகளில் அவர்களுக்கென தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் தனக்கென தனி அடையாளத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் அரசு இலவச பேருந்து சேவையை அளிக்கிறது. மாற்றுத்திறனாளர் நலத்திட்டத்தில் வரையறுக்கப்படும் 21 வகையான மாற்றுத்திறனாளர்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளர்களை கவனித்துக் கொள்ள ஒருவர் உடன் இருப்பார். தற்போது அந்த உதவியாளர் ஒருவரும் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை