ATM பரிவர்த்தனைகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் கட்டணம் உயர்வு - RBI
ATM பரிவர்த்தனைகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் கட்டணம் உயர்வு ATM இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த வகையில் நிதி மற்றும் நிதி சாரா பண பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ATM மையங்களில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி (ATM) உயர்த்தியுள்ளது. தற்போது வரை ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ATM வழியாக பண பரிவர்த்தனை செய்வதற்கு மாதம் ஐந்து முறையும், மற்ற வங்கி ATM களில் மூன்று முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த பணப் பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த குறிப்பிட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மேலாக சேவைகளை மேற்கொள்ள 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ATM மூலம் பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து RBI வெளியிட்டுள்ள அறிக்கையில், ATM மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைக்கான கட்டணம் கடந்த 2014, ஆகஸ்ட் மாதம் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் குறிப்பிட்ட அளவு இலவச பண பரிவர்த்தனைக்கு மேல் மேற்கொள்ள ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
அதுபோல, ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் வேறொரு வங்கியின் ATM மூலம் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. தவிர நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை