ஜூன் 8 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன...! எதற்கெல்லாம் அனுமதி!
தமிழகத்தில் ஜூன் மாதம் 7ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வருகின்றது. ஜூன் 7ம் தேதிக்கு பின்பு எதெற்கெல்லாம் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாதிக்கு குறைந்து வரும் மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு தளர்வுகள் (வாய்ப்பு):
- ஜூன் 7ம் தேதிக்கு பின்பு பேருந்து போக்குவரத்து தவிர வாடகை டாக்சிகளில் மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதியளிக்க வாய்ப்பு.
- மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் அவசியம் இல்லை.
- ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் மேற்கொள்ள இ-பாஸ் முறை நீடிக்கும்.
- தேநீர் கடைகள், உணவகங்கள் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்க வாய்ப்பு.
- சென்னை மாநகரை பொறுத்த வரை சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி வழங்க வாய்ப்பு.
- வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்க வாய்ப்பு.
ஜூன் 8 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன...! எதற்கெல்லாம் அனுமதி!
Reviewed by Rajarajan
on
2.6.21
Rating:
கருத்துகள் இல்லை