Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

“தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு







முழு ஊரடங்கை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்ய, நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள் குழு பரிசீலனை செய்து கோரிக்கை வைத்திருந்தது.


இந்நிலையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் ஒருவார காலம் நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுள்ளார்.

மளிகை, பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்


காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதி


மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படும் அனுமதி அளிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகள் அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்


இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்


அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி


சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50% டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி


தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி


 

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை பதிவுடன் அனுமதி.

மின் பணியாளர் , பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுய தொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உடன் பணிபுரிய அனுமதி


மின் பொருட்கள் ,பல்புகள் ,கேபிள்கள் ,சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்படும் அனுமதி


 

மிதிவண்டி, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி


ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்


வாகனங்களை உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி


கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும


வாகனம் பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதி


வாடகை வாகனங்கள் ,டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இபாஸ் உடன் செல்ல அனுமதி . வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் , ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி


“தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  “தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  Reviewed by Rajarajan on 5.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை