தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!
பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் குறைந்து வருகிற காரணமாக பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 14) முதல் பள்ளி, கல்லூரிகள் நிர்வாக பணிகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இத்தகைய சூழலில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இது குறித்து தெரிவித்ததாவது, தமிழகத்தில் கொரோனா சூழல் கட்டுக்குள் வந்ததும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இது தொடர்பாக அறிக்கை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஓர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் தெரிவித்ததாவது, ‘ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்த மக்களுக்கு நன்றி. தமிழகத்தில் கொரோனா பரவலை பொறுத்து விரைவில் பள்ளிகள் திறப்பிற்கு அனுமதி வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை