Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

MAadhaar செயலி மூலமாக பல்வேறு ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? UIDAI அறிவிப்பு!!

 




MAadhaar செயலி மூலமாக 35க்கு மேற்பட்ட ஆதார் தொடர்பான சேவைகளை பெறலாம் என UIDAI தெரிவித்துள்ளது. 

UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஆதார் அட்டை குறித்த சேவைகளை பெற இ-சேவை மையங்களை அணுக தேவையில்லை. MAadhaar செயலி மூலமாக இனி ஆதார் சேவைகளை எளிமையான முறையில் வீட்டிலிருந்தே செய்ய முடியும். Android மற்றும் iPhone பயனர்கள் இருவரும் mAadhaar பயன்பாட்டை சில நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம். உங்களது மொபைல் எண்ணில் Play Store இல் mAadhaar என தேட வேண்டும். Android பயனர்கள் mAadhaar செயலியை பெற https://play.google.com/store/apps/detailsid=in.gov.uidai.mAadhaarPlus&hl=en_IN என்ற லிங்கை கிளிக் செய்து,  பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

செயலியை பதிவிறக்கிய பிறகு, அதைத் திறந்து மேலும் தொடர விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், பயன்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் மொழி ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டவர்கள் மட்டுமே mAadhaar பயன்பாட்டில் ஆதார் சுயவிவரத்தை உருவாக்க முடியும்.


ஆதார் சுயவிவரத்தை (Profile) உருவாக்குவது எவ்வாறு?

உங்கள் மொபைல் தொலைபேசியில் mAadhaar பயன்பாட்டைத் திறந்து, பிரதான டாஷ்போர்டின் மேலே உள்ள “பதிவு ஆதார்” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது 4 இலக்க கடவுச்சொல்லை உருவாக்கி, உங்கள் ஆதார் எண் & கேப்ட்சா குறியீட்டை உள்ளிடு செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். OTP ஐ உள்ளிட்டு ‘Submit’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


OTP சரிபார்க்கப்பட்டதும், உங்கள் சுயவிவரம் வெற்றிகரமாக பதிவு செய்யப்படும்.

அதன் பின்னர் உங்களது சுயவிவரம் ஆதார் பெயருடன் காட்டும். இப்போது கீழே உள்ள மெனுவில் உள்ள எனது ஆதார் தகவலை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் கடவுச்சொல்லை வழங்க வேண்டும். இப்போது எனது ஆதார் டாஷ்போர்டு வரும்.

உங்கள் ஆதார் சுயவிவரத்தை பயன்படுத்துவது எவ்வாறு?

mAadhaar பயன்பாட்டைத் திறந்து பிரதான டாஷ்போர்டின் கீழ் உள்ள ‘Aadhaar Profile’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது ஏற்கனவே உருவாக்கப்பட்ட 4 Digit Pin / கடவுச்சொல்லை உள்ளிடு செய்யவும்.

உங்கள் ஆதாரின் முன் பக்கம் தோன்றும். உங்கள் ஆதாரின் பின்புறத்தைக் காண அதை இடதுபுறமாக ஸ்லைடு செய்யலாம்.

சேர்க்கப்பட்ட பிற சுயவிவரங்களைச் சரிபார்க்க இடதுபுறமாக கிளிக் செய்ய வேண்டும்.

ஆதார் சுயவிவரப் பக்கத்தைத் திறக்க டாஷ்போர்டு திரையின் அடிப்பகுதியில் உள்ள எனது ஆதார் விருப்பத்தைத் தட்டவும், அங்கு சேர்க்கப்பட்டுள்ள சேவைகள் இருக்கும்.

MAadhaar செயலி மூலமாக பல்வேறு ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? UIDAI அறிவிப்பு!! MAadhaar செயலி மூலமாக பல்வேறு ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? UIDAI அறிவிப்பு!! Reviewed by Rajarajan on 11.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை