தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா தமிழக மாணவர்கள்..?
CBSE மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்திலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு மத்தியில் அதிகம் பேசப்பட்டது 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தான். வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகளில் புதிய கல்வியாண்டு தொடங்கி விடும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. காரணம் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மாணவர்களின் உயர்கல்விக்கு மிக முக்கியமானதாக உள்ளது. இதனால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா பரவலும் குறையாத நிலையில், நேரடி முறையில் தேர்வுகளை நடத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்று. மேலும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதும் அளவிற்கு அனைத்து மாணவர்களிடமும் தேவையான உபகரணங்கள் இல்லை. இதனால் தொடர் ஆலோசனைகளை நடத்திய மத்திய அரசு இன்று இறுதிக்கட்டமாக பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில், CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவை பொறுத்தே தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். தற்போது CBSE தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. CBSE கல்வி வாரியம் மாணவர்களின் தேர்வு மதிப்பீடு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
கருத்துகள் இல்லை