கொரோனா தாக்கம் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் மழலையர் பள்ளிகளை நிரந்தரமாக மூட முடிவு
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் மழலையர் பள்ளிகளை நிரந்தரமாக மூட முடிவு செய்திருப்பதாக பள்ளி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுப்பு:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மழலையர், நர்சரி, பிரைமரி போன்ற அனைத்து பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து கணக்கெடுக்கும் பணிகளை தொடங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிவிட்டுள்ளது. இது தொடர்பான பணிகளில் ஈடுபடும் பொது தான் பல மழலையர் பள்ளிகள் நிரந்தரமாக மூட முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான மழலையர் பள்ளிகள் வாடகை கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகின்றது. பல மாதங்களாக பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் உள்ளதால் கட்டிடத்திற்கான வாடகை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் வீணாகியுள்ளது. மேலும், கொரோனா 3ம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போதைக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கும் சூழல் இல்லை இதனால் பள்ளிகளை நிரந்தரமாக மூட முடிவு செய்திருப்பதாக பள்ளிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு சில பள்ளிகள் மட்டுமே மீண்டும் பள்ளிகளை நடத்தவிருப்பதாகவும், அதற்கான அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில்,தனியார் மழலையர், நர்சரி, பிரைமரி பள்ளிகளின் கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்குவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை