Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஒரு ஆதார் கார்டின் மூலம் 18 சிம்கள் வாங்கலாம் – முழு விபரம் இதோ!

ஒரு நபரின் ஆதார் அட்டையை வைத்து எத்தனை சிம் கார்டுகள் பெற முடியும் மற்றும் நமது அனுமதி இன்றி ஏதேனும் சிம்கள் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் முறையை பற்றி காண்போம்.


26.09.2018 தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சந்தாதாரர்களுக்கு புதிய மொபைல் இணைப்புகளை வழங்குவதற்கும், ஏற்கனவே உள்ள மொபைல் சந்தாதாரர்களை மீண்டும் சரிபார்ப்பதற்கும் ஆதார் அடிப்படையிலான E-KYC சேவை UIDAI ஐப் பயன்படுத்துவதை DoT நிறுத்தியுள்ளது. இருப்பினும் உச்சநீதிமன்றமே மீண்டும் தானாக முன்வந்து இந்த முறையை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.


2018 ஆம் ஆண்டில், தொலைத்தொடர்புத் துறை ஒரு பயனருக்கான இணைப்புகளின் எண்ணிக்கையை நிபந்தனையின் பேரில் 18 ஆக உயர்த்தியது. M2M தகவல்தொடர்புக்கு தேவையான சிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். 9 சிம்கள் இப்போது சாதாரண மொபைல் ஃபோன் தகவல்தொடர்புகளுக்கும், மற்ற 9 சிம்களை எM2M தகவல்தொடர்புகளுக்கும் வாங்கலாம். M2M என்பது இயந்திரத்திலிருந்து இயந்திர தகவல்தொடர்புகள் என்பதன் விளக்கமாகும்.


  • நமது ஆதார் மூலம் பெறப்பட்டுள்ள சிம்களை பற்றி அறிந்து கொள்ள https://tafcop.dgtelecom.gov.in/ என்ற போர்ட்டலை பயன்படுத்தலாம். இந்த போரட்டலின் மூலம்,
  • சந்தாதாரர்கள் தங்கள் பெயரில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பல இணைப்புகளைக் கொண்டிருப்பின் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுவார்கள்.
  • பயனர்கள் தங்கள் சிம்களை பற்றித்தெரிந்து கொள்ள போர்ட்டலில் நுழைந்து “Request Status” என்பதனை தேர்வு செய்து “Ticket ID Ref No” என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடும் படி கேட்கும். இப்பொழுது OTP கேட்கப்படும்.
  • இப்பொழுது, உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வாங்கிய அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் வரும்.
  • இதன் மூலம் நமது ஆதார் எண்ணை பயன்படுத்தி அனுமதியின்றி ஏதேனும் சிம்கார்டுகள் பெறப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஒரு ஆதார் கார்டின் மூலம் 18 சிம்கள் வாங்கலாம் – முழு விபரம் இதோ! ஒரு ஆதார் கார்டின் மூலம் 18 சிம்கள் வாங்கலாம் – முழு விபரம் இதோ! Reviewed by Rajarajan on 24.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை