COVID 19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த அரசாணை
கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கு கால அவகாசம் மற்றும் விடுப்பு எடுத்து கொள்ளும் நாட்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, அரசு பணியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தாலோ, மருத்துவ சான்றிதழ் இல்லாமல் 20 நாட்களுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் EL அடிப்படையில் 15 நாட்களும், HPL அடிப்படையில் 5 நாட்களும் அவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு 20 நாட்கள் வரை வீட்டு தனிமையிலோ அல்லது மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களோ 20 நாட்கள் வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். தவிர 20 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தால், மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து அந்த அரசு ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த பிறகு உரிய மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து 20 நாட்களுக்கு மேலாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பணியாளரின் நெருங்கிய உறவுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், தொற்று உறுதி செய்யப்பட்ட 15 நாட்கள் வரை அந்த ஊழியர் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரிடம், அரசு பணியாளர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தால், வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். மேலும் 1 முதல் 7 நாட்களுக்கு வீடுகளில் இருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பவர்கள், வீடுகளில் இருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID 19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த அரசாணை
Reviewed by Rajarajan
on
9.6.21
Rating:
கருத்துகள் இல்லை