தமிழகத்தில் வருகிற ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா...?
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 14ம் தேதி முதல் குறிப்பிட்ட மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் நிர்வாக பணிகளுக்காக திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தற்போது 2021-22 புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் இலவச புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற ஜூலை மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது வரை அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்பதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து இலவச பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் தாமதம் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை