தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் செயல்பட அனுமதி? புதிய தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு!!
தமிழகத்தில் வருகிற 14ம் தேதியுடன் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு முடிவுக்கு வரும் சூழலில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் வாரங்களில் எந்த செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தளர்வுகள்:
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. கடந்த ஜூன் 7ம் தேதி உடன் தளர்வுகளற்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்த நிலையில் சில தளர்வுகள் அளித்து ஊரடங்கு வருகிற 14ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். மேலும் தற்போது தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நன்கு பலன் அளித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் வாரத்தில் மேலும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 3000 சதுர அடிக்கு குறைவாக உள்ள அனைத்து கடைகளும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்க வாய்ப்புள்ளது. அதேபோல் சிறிய துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் இயங்க வாய்ப்புள்ளது. டீ கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பேருந்துகள் அனைத்தும் 50 சதவிகித பயணிகளுடன் இயங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக், சலூன் கடைகள், உடற்பயிற்சி கூடங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை