Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அனைத்து வகையான வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர்

 

உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போது உருமாறி டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என பல வகைகளாக பரவி வருவதால் அனைத்து வகையான வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர் வேக்சினை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


சூப்பர் வேக்சின் அறிவிப்பு:

கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா முதல் அலையை போல இல்லாமல், இரண்டாம் அலையில் உருமாறிய கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.




மேலும் கொரோனா மூன்றாம் அலையில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசி பயனளிக்காமல் உள்ளது. இந்நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் பல வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.


இந்த வரிசையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இதனை எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்துள்ளனர்.


இந்த மருந்து கொரோனா தொற்று மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசியானது கொரோனா வைரஸ்கள் மட்டுமின்றி, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு முதல் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்படும்.

அனைத்து வகையான வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர் அனைத்து வகையான வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர் Reviewed by Rajarajan on 24.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை