Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு



கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்:

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 4000 பேர் உயிரிழந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது அதிக வீரியத்துடன் பரவுவதால் மரணங்கள் அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.


இந்த கொரோனாவால் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். தங்களை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமலும் உணவின்றியும் சிரமப்படுகின்றனர். இவர்களை பாதுகாக்கும் பொருட்டு கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு உதவுமாறும், அதற்கான நடவடிக்கையை மாநில அரசுகள் முன்னெடுக்குமாறு அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண தொகைகளை அறிவித்து வருகின்றன.



டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பீகார் ஆகிய மாநிலங்கள் 5 லட்சம், 3 லட்சம் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகை போன்றவற்றை அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் பட்டம் பெறும் வரை ஆக கூடிய அனைத்து கல்வி செலவுகளையும் அரசு ஏற்கும் எனவும் உறுதியளித்துள்ளனர். மத்திய அரசு சார்பில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பத்து லட்ச ரூபாய் வைப்புத்தொகை அளிப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் பற்றி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Reviewed by Rajarajan on 1.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை