தமிழக அரசு அலுவலகங்களில் பிற மாநிலத்தவர்கள் அதிகம் பணியில் சேரும் வகையில் உள்ள அரசின் ஆவணங்களை மாற்றி அமைக்கவும், ரத்து செய்யவும் முடிவு
தமிழகத்தில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு பணி வழங்குவதை ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் நேற்று (ஜூன் 21) நடந்த முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரையுடன் தொடங்கினார். தனது உரையின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஆளுநர் அவர்கள் வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல் சமூக நீதியை பாதுகாக்கும் பொருட்டு 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு வேலையில் முன்னுரிமை, தமிழக அரசு அலுவலகங்களில் பிற மாநிலத்தவர்கள் அதிகம் பணியில் சேரும் வகையில் உள்ள அரசின் ஆவணங்களை மாற்றி அமைக்கவும், ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்தார். இதை தொடர்ந்து தற்போது இது குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, தமிழக அரசு பணிகளில் தமிழர்களை தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் எப்படி பணி வழங்கினார்கள் என ஆய்வு செய்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக நிதி அமைச்சர் அவர்கள் தெரவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை