ஜூலை 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்க அனுமதி
தெலுங்கனா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 20 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜூலை 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், தமிழகம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிலைமை மோசமானது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே உள்ளதால் ஜூன் 20 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை முற்றிலுமாக நீக்க அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் மாநிலம் முழுவதும் 1.14 சதவிகிதமாக உள்ளதால் அது குறித்து அரசிடம் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 1 முதல் திறக்கப்படும் என முதல்வர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல நாட்கள் கழித்து நேரடி வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை