கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி? முக்கிய தகவல் வெளியீடு!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் போதுமானது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பரவி வருவதால் இதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் 3 மாத இடைவெளிக்கு பின்பு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டால் போதுமானது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கும். பாதிக்கப்படாத நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்பு அவர்கள் உடம்பில் கிருமிகளை கண்டறிந்து பின் ஆன்டிபாடிகளை வெளியேற்றுவதற்கு வேலை செய்யும். பின்பு இரண்டாவது டோஸ் செலுத்திய பின்பு ஆன்டிபாடிகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மக்களுக்கு வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் ஆன்டிபாடி அதிகரிப்பதோடு, தடுப்பூசி எடுக்கும் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நோயாளியை காப்பாற்ற போதுமான அளவில் செயல்படுவதாக தற்போதைய ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட கொரோனா நோயாளிகள் மிகவும் வலுவான ஆன்டிபாடிகளை பெறுவதை கண்டறிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை