இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு – சுகாதார நிபுணர்கள் கருத்து!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை போல் இல்லாமல் மூன்றாம் அலை குறைவான தாக்கத்தை தான் ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் அலை தாக்கம் குறைவான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு இரண்டாம் அலை தாக்கம் அதிவேகமாக இருந்தது. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்புகளும் 4 ஆயிரத்தை நெருங்கியது.
இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம், இரண்டாம் அலையை போல அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என பல தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சுகாதார நிபுணர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதில் 85 சதவிகிதம் பேர் இந்தியாவில் கொரோனா 3ம் அலையின் தாக்கம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் எனவும், 70 சதவிகிதம் பேர் அதன் பாதிப்பு குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 5 சதவிகிதம் பேருக்கு போடப்பட்டிருக்கும் நிலையில் அதன் காரணமாகவும் மூன்றாம் அலை தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பெரும்பான்மையான சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர். இதற்கு காரணமாக 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்காததே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை