Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TN e-Sevai - ஜாதிச் சான்றிதழ் உட்பட அரசு ஆவணங்கள் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் எளிய முறைகள்!





மொபைல் மூலமாக தேவையான சான்றிதழ்களை விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறாக, வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஓபிசி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வேலையில்லா பட்டதாரி சான்றிதழ், விதவை சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் ஆகியவை விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# என்ற இணையதளத்தை Open செய்ய வேண்டும்.
  • அதில் Sign up என்ற Option யை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உங்களது, முழு பெயர், மாவட்டம், தாலுகா, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login id, Password, Confirm Password மற்றும் Captcha Code ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.
  • பின்னர் Sign up கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும்.
  • உங்களது OTP எண்ணை கொடுத்து Enter என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு register ஆகிவிடும்.
  • அடுத்து மீண்டும் Home page சென்று login செய்ய வேண்டும். அதற்கு உங்களது User Name, Password வழங்க வேண்டும். மேலும் captcha code யை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் login பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்களது ID login ஆகிவிடும். login செய்தவுடன் service என்ற optionயை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Revenue Department என்ற option யை கிளிக் செய்ய வேண்டும்.
  • Revenue Department சேவைகள் குறித்த list காட்டும். அதில் நீங்கள் தேவைப்படும் சான்றிதழை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஜாதி சான்றிதழ் கிளிக் செய்த பின்னர் proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து can நம்பர் பதிவு செய்ய வேண்டும். அதில் உங்களது விவரம், தந்தை பெயர், தாயார் பெயர், குடும்ப உறுப்பினர் விவரம் என அனைத்தையும் உள்ளிட்ட வேண்டும்.
  • நீங்கள் select செய்துள்ள ஜாதி சான்றிதழுக்கு தேவையான Documents யை upload செய்ய வேண்டும். பின்னர் தங்களுடைய photo, any address proof, birth certificate, self declaration போன்றவற்றை upload செய்ய வேண்டும்.
  • அனைத்து விவரங்களையும் Upload செய்த பின்னர் Make payment option கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் விண்ணப்ப கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும்.
  • இவ்வாறு Apply செய்த பின்னர் சில நாட்களுக்குள் உங்களது சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
TN e-Sevai - ஜாதிச் சான்றிதழ் உட்பட அரசு ஆவணங்கள் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் எளிய முறைகள்! TN e-Sevai - ஜாதிச் சான்றிதழ் உட்பட அரசு ஆவணங்கள் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் எளிய முறைகள்! Reviewed by Rajarajan on 11.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை