கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்
கொரோனா தொற்றின் சங்கிலியை உடைப்பதற்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்றும், தகுதி உடையவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் சில தனியார் துறைகளில் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் CoWin வலைத்தளம் அல்லது ஆரோக்கிய சேது ஆப் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.
CoWin வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:
பயனர்கள் கோவின் அதிகாரபூர்வ வலைத்தளமான https://www.cowin.gov.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
பின்பு அதில் பயனர்கள் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரை பதிவு செய்து எண்ணிற்கு வரும் OTP பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
அதில் பயனர்கள் பெயரின் கீழ் சான்றிதழ் டேப் இடம் பெற்றிருக்கும்.
இதனை தொடர்ந்து டவுன்லோட் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் சான்றிதழ் பதிவிறக்கம் ஆகிவிடும்.
ஆரோக்ய சேது ஆப் மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
கூகுள் பிளஸ் ஸ்டோரில் இருந்து பயனர்கள் முதலில் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்பு பயனர்கள் தங்களது போன் நம்பர் மூலம் செயலி உள்நுழைந்து CoWin என்னும் டேபினை கிளிக் செய்ய வேண்டும்.
Vaccination Certificate என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து பயனர்கள் தங்களது 13 இழக்க யூசர் ஐடியை பதிவு செய்ய வேண்டும்.
பின்பு டவுன்லோட் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் சான்றிதழ் பதிவிறக்கம் ஆகிவிடும்.
கருத்துகள் இல்லை