சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முழு தகவல்
கொரோனா நோய்பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணாக்கர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வு குறித்து முறையான அறிவிப்பு வெளிவராத காரணத்தினால் பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்கள் மத்தியில் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து கொரோனா நோய்பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்யும்படி பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியதாவது, தற்போது நோய்பரவல் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் மாணாக்கர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க சிறிது கால அவகாசம் தேவை என்று தெரிவித்தது. இது குறித்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை முடிவில் கொரோனா நோய்பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவுப்பு பெற்றோர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் மதிப்பீடு குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை