அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் பணிகள் தீவிரம்
தமிழக அரசு சார்பில் இலவச பாட புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு அனைத்து கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று பள்ளிகளுக்கு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசின் இலவச பாட புத்தகங்கள் :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியதால் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் மாணவர்கள் கல்வி நிலை குறித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர். இதன் காரணமாக தேர்வுகள் இன்றி மாணவர்கள் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாவட்ட குடோனில் இருந்து புத்தகங்களை வேனில் பள்ளிக்கு எடுத்து செல்லும் பணி தொடங்கியுள்ளது.
அதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று பள்ளிகளுக்கு வழங்கி வருகிறார்கள். பள்ளிகள் திறக்கபடாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்து படிப்பதற்காக இந்த மாதத்திற்குள் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை