Jipmer Admission ஜிப்மரில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படியில் சேர்க்கை, இனி தனி நுழைவுத்தேர்வு இல்லை..!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் சேர வழக்கமாக நுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றியடைந்த மாணவர்கள் கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். நர்சிங் மற்றும் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தது. இந்த கல்வியாண்டு முதல் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படும் என ஜிப்மர் தெரிவித்துள்ளது. மேலும் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நுழைவுத் தேர்வும் கடந்த வரும் ரத்து செய்யப்பட்டது.
மருத்துவ படிப்பில் சேருவதற்காக மாணவர்களுக்கு மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும் என அறிவித்தது. இதன் காரணமாக ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தியது. இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நீட் தேர்வு நடைபெறாமல் உள்ளது.
இந்நிலையில் இக்கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது. 2021ம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் இருக்கும். பிஎஸ்சி படிப்புகளுக்கு ஜிப்மரில் தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படாது. இப்படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜிப்மர் தனியாக நடத்தும். கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் ஜிப்மர் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை