மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 7 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான Security Guard வேலை – 1086 காலியிடங்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Eastern Coalfields Limited) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Security Guard பணிக்கு தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும், விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Security Guard பணிகளுக்கு என மொத்தமாக 1086 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Unreserved பிரிவினர் – 842 பணியிடங்கள்
SC பிரிவினர் – 163 பணியிடங்கள்
ST பிரிவினர் – 81 பணியிடங்கள்
கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்டுள்ள மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Physical Standard Test மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
கருத்துகள் இல்லை