ஆடம்பரமே வேண்டாம்.. சிம்பிளாக செய்தால் போதும்.. இறையன்பு அதிரடி கடிதம்!
தான் ஆய்வு செய்ய வரும் இடங்களில் ஆடம்பர உணவுகள் வேண்டாம் என தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணத்தை கொண்டும் எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் தலைமைச் செயலாளராக பணியாற்றும் வரை எந்த திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக கருதி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளார்.
அது போல் அடுத்த அதிரடியாக சாலைகளை போடும் போது பழைய சாலைகள் நன்றாக பெயர்த்து விட்டுதான் சாலை போட வேண்டும். சாலைகள் உயரமாகி, தெருக்கள் பள்ளமானால் மழை காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் நிலையால் இந்த புதிய உத்தரவை பிறப்பித்தார்.
கொரோனா 2ஆம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம். காலை, இரவு நேரங்களில் எளிய உணவும், மதியம் இரண்டு காய்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சாதாரண அரசு பதவி கிடைத்தாலே எதிராளியிடம் இருந்து சுரண்ட நினைப்போர் மத்தியில் இப்படியும் ஒருவரா என மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை