தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு ஆண்டிற்கான வகுப்புகள் தொலைக்காட்சி மூலமாக துவக்கம்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு அலைவரிசை கல்வி தொலைக்காட்சி ஆகும். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் நேரத்தில் பள்ளிகள் திறக்க முடியாத காரணத்தினால் இந்த தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேர அடிப்படையில் இந்த தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. 2021-22 ஆம் கல்வியாண்டு தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிய பாடத்திட்டங்கள் தற்போது அந்த தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும், 30 நிமிடங்கள் வீதம் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு காலை, 8:00 மணிக்கு துவங்கி, மாலை, 4:30 வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர. ஜூன் 16 வரை பாடவாரியாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி நிர்வாகம் இது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கற்றல் பணியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வகுப்பு வாரியாக அட்டவணைகளை காண இங்கே கிளிக் செய்யவும். 🔔🔔🔔
கருத்துகள் இல்லை