வங்கி கணக்கில் தவறாகப் பணத்தை செலுத்தினால் எளிதில் திரும்ப பெற முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?
இந்தியாவில் தற்போது அதிக அளவில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பல நன்மைகள் மற்றும் பல தீமைகள் ஏற்படுகிறது. நன்மை என்னவென்றால் வாடிக்கையாளர்கள் சில நிமிடங்களில் பண பரிவர்த்தனையை ஆன்லைன் மூலம் முடிக்க இயலும். அதே சமயத்தில் தீமை என்னவென்றால் சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது வங்கி கணக்கு எண்ணை தவறுதலாக பிழையான கணக்கு எண்ணை பதிவு செய்து விடுகின்றனர்.
பல தரப்பு மக்கள் சில நேரங்களில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது தவறான கணக்கிற்கு பணத்தை செலுத்தி விடுகின்றனர். தற்போது இதை எவ்வாறு திரும்ப பெறுவது என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.
இதனால் பணம் வேறு வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது. இந்த வழியில் பல முறை மக்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். தற்போது இதனை போக்கும் வகையில் ஓர் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எனவே மக்கள் இதுபோல் தவறுதலாக ஏதும் செய்தால் மிக எளிதாக பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலில் இதுகுறித்து வங்கி மேலாளருக்கு வாடிக்கையாளர்கள் கடிதம் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
பின்பு நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண், தேதி, நேரம் மற்றும் பணம் எவ்வளவு மதிப்பு என்பதை பற்றி தகவல் வழங்க வேண்டும். இதை அடுத்து நீங்கள் பணத்தை எந்த வங்கிக்கு அனுப்பினீர்களோ அந்த பேங்கை, வங்கி தொடர்பு கொள்ள வேண்டும். புகாரை தாக்கல் செய்த பிறகு, உங்கள் பணத்தை திரும்பப் பெற வாடிக்கையாளர் இடம் இருந்து திரும்பி தர அனுமதி அளிக்கும். இதனுடன் வங்கி முழு நடவடிக்கையும் எடுத்து உங்கள் பணத்தை அந்த நபரிடம் இருந்து வாங்கி தந்து விடும். எனவே மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை