தமிழகத்தில் பள்ளிகள் இன்று முதல் திறப்பு – தலைமை ஆசிரியர்களுக்கான செயல்முறைகள்! education
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கான மதிப்பெண்களை நிர்ணயம் செய்வதற்கான மதிப்பீடுகளை வகுக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயில தேவையான சான்றிதழ் வழங்குவது, மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களுக்கு வாழங்கப்பட வேண்டிய இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவது, மேலும் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்க தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் அதனை சுத்தம் செய்யவும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும், அப்பள்ளி அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2021-22 ஆம் ஆண்டுக்கான 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை,
- அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கொரோனா காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவிகிதம் கூடுதலாக மாணவர்கள் சேர்த்திடலாம்.
- மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ அச்சூழ்நிலையில் 10 ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு ஏதும் நடத்த தேவை இல்லை. மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிரிவுகள் வழங்கப்பட வேண்டும்.
- பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3வது வாரத்திலிருந்து அப்போது கொரோனா பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை துவங்கலாம்.
- 11 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3வது வாரத்தில் அப்போது கொரோனா பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை துவங்கலாம்.
- 2021-22 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பபில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.
- புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான சேர்க்கை நடத்த வேண்டும். 11 ஆம் வகுப்பில் சரியான பாடத்தொகுதியை தேர்ந்தெடுக்கசேர்க்கை நடத்த வேண்டும்.
- 2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களையும் 11 ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும். இதற்காக அருகில் உள்ள ஊட்டுபள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். இதற்காக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- ஜூன் 3 ஆம் வாரத்தில் 11 ஆம் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதால் பள்ளிவளாகம், வகுப்பறைகள், கரும்பலகை, கழிப்பறைகள், விடுதிகள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை தூய்மை செய்து தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
- நீண்ட நாட்கள் விடுதிகள் மற்றும் வகுப்புகள் செயல்படாத நிலையில் உள்ளதால் குடிநீர் குழாய் இணைப்புகள், மின் சாதன இணைப்புகள், மின் மோட்டார், உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.
- ஆழ்துளை கிணறுகள் திறந்தவெளி கிணறுகள் ஆகியற்றை உரிய முறையில் மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இதற்கு முன் நடத்தப்பட்டது போலவே இந்த ஆண்டும் தனித்தனியாக நடத்தப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை