10, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு கட்டாய தேர்வு – பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கு செல்லாமல் தனியாக தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு எழுத முடியாமல் பெரும் துயரத்தில் உள்ளனர். மேலும் அவர்களுக்கு தேர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தனியாக தேர்வு எழுத தயாராகி உள்ள 10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை