NEET தேர்வின் படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியாது என கூட்டத்தில் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில அளவில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்கிறோம்; நீட் தேர்வு நடத்த வேண்டாம்.
எப்படி மத்திய அரசின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி, விவசாய கல்லூரிகளுக்கு ஜே.இ.இ, ஐ.சிஆர். தேர்வுகள் நடத்துவது போல மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்திக் கொள்ளுங்கள்.
ஆனால் மாநிலங்களின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு முதலில் நடத்தப்பட்டதைப் போல மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என கோரிக்கை வைத்திருக்கிறோம். அந்த கோரிக்கை எந்த அளவுக்கு ஏற்கப்படும் என்பது போகப் போகத்தான் தெரியும். புதிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கப் போவது இல்லை ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டோம். இவ்வாறு அமைச்ச பொன்முடி கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறுகையில், பிளஸ் டூ தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்
NEET தேர்வின் படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியாது என கூட்டத்தில் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
23.5.21
Rating:
Reviewed by Rajarajan
on
23.5.21
Rating:


கருத்துகள் இல்லை