Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதல் 5 கையெழுத்து!





முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.


பின்னர் அவர் நேராக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவரை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், முதலமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலமைச்சருக்கான இருக்கையில் அமர்ந்தார்.




பின்னர் அவர் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, 

1.கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான முதல் உத்தரவில், ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதல் தவணையாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்பட இருக்கிறது.


2.இரண்டாவதாக, ஆவின் பால் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாயை குறைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.


3.நகர அரசு பேருந்துகளில் அனைத்து மகளிரும் இலவச பயணம் மேற்கொள்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு தொகையான ரூ.1200 கோடியை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.


4. ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.


5.கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவக் கட்டணத்தை தமிழக அரசே, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதல் 5 கையெழுத்து! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதல் 5 கையெழுத்து! Reviewed by Rajarajan on 7.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை