கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாசம் சம்பளம் கிடையாது; இந்த மாநில அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டு என்று வலியுறுத்தி வரும் மத்திய அரசு, தடுப்பூசி போடும் பணிகளையும் விரைவு படுத்தியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றிருந்த நிலை மாற்றியமைக்கப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கரேலா பெந்த்ரா மார்வாகி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், துறைக்குட்பட்ட ஆசிரமங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்ளா விட்டால் அடுத்த மாத சம்பளம் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாசம் சம்பளம் கிடையாது; இந்த மாநில அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
Reviewed by Rajarajan
on
29.5.21
Rating:
கருத்துகள் இல்லை