TN Election Result 2021 live - தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 நேரடி தகவல்கள்
தேர்தல் முடிவுகள்
திமுக - 155, அதிமுக - 79, அமமுக -0 மநீம - 0 இடங்களில் முன்னிலை
7.00 PM – தமிழகத்தில் தற்போது 150க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியை கைபிடித்துள்ளது திமுக கூட்டணி. தற்போது தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
6.50 PM – திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளரான பூண்டி கலைவாணன் வெற்றி.
6.50 PM – ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான அப்பாவு வெற்றி.
6.15 PM – திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளரான கே.என்.நேரு வெற்றி.
6.14 PM – கோவை தெற்கு தொகுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன் பின்னடைவு.
6.06 PM – அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான இசக்கி சுப்பையா வெற்றி.
6.06 PM – எடப்பாடி தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி.
5.12 PM – கீழ்பெண்ணத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரான பிச்சாண்டி வெற்றி.
5.10 PM – திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளரான தங்கம் தென்னரசு வெற்றி.
5.08 PM – கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராஜேஷ் குமார் வெற்றி.
5.06 PM – உதகமண்டலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கணேஷ் வெற்றி.
5.06 PM – தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளரான நீலமேகம் வெற்றி.
5.06 PM – சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் வெற்றி.
4.25 PM – குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளரான ராமச்சந்திரன் வெற்றி.
4.22 PM – அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான ரவி வெற்றி.
4.20 PM – ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளரான தேவராஜ் வெற்றி.
4.15 PM – கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய் வசந்த் வெற்றிபெற்றுள்ளார்.
4.15 PM – சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளரான பரந்தாமன் வெற்றி.
4.15 PM – திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளரான எ.வ.வேலு வெற்றி.
3.42 PM – சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் 48,487 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
3.39 PM – பவானி சங்கர் தொகுதியில் அதிமுக வேட்பாளரான பண்ணாரி 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
3.33 PM – தமிழகத்தில் 118 இடங்களில் திமுக கட்சி முன்னிலை. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்த 151 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
3.30 PM – வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளரான அம்பேத்குமார் 36,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
3.30 PM – குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளரான ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
2.50 PM – துறைமுகம் தொகுதியில் திமுகவின் சேகர் பாபு பாஜக வேட்பாளரான வினோஜ் செல்வதை விட 8090 வாக்குகள் முன்னிலையில் வகிக்கிறார்.
2.47 PM – கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரான நாகை மாலி வெற்றி.
2.46 PM – திருமங்கலம் தொகுதியில் முறைகேடு நடப்பதாக புகார். வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.
2.41 PM – ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு தொடர்ந்து பின்னடைவு.
2.40 PM – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரான மார்க்கண்டேயன் வெற்றி.
2.40 PM – கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமுல் கந்தசாமி வெற்றி.
2.00 PM – 9ம் சுற்று நிலவரப்படி பல்லாவரம் தொகுதியில் 1,038 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.
2.00 PM – திமுக கூட்டணி 149 தொகுதிகளில் முன்னிலை.
1.12 PM – 8வது சுற்றின் முடிவில் திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 661 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
1.12 PM – போடிநாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் முன்னிலை.
1.05 PM – எடப்பாடி தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை.
1.05 PM – துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.
12.51 PM – திருவாரூர் தொகுதியில் திமுக முன்னிலை.
12.51 PM – கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 15,115 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
12.51 PM – தமிழகத்தில் திமுக கட்சி 118 தொகுதிகளில் முன்னிலை.
12.01 PM – விருகம்பாக்கம் தொகுதியில் 5வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் 2,781 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
12.00 PM – திருப்போரூர் தொகுதியில் 5வது சுற்றின் முடிவில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் முன்னிலை.
11.55 AM – பல்லாவரம் தொகுதியில் 5ம் சுற்று முடிவில் 300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை.
11.54 AM – எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி 46,267 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார்.
11.53 AM – கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் 13,709 வாக்குகளை பெற்றுள்ளார்.
11.49 AM – நாகப்பட்டினம் தொகுதியில் 3வது சுற்றில் விடுதலை சிறுத்தைகள் முன்னிலை.
11.48 AM – விழுப்புரம் தொகுதியின் நாங்காவது சுற்றில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் 781 வாக்குகள் பின்னிலை.
11.45 AM – கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய் வசந்த் 29,623 வாக்குகள் பெற்று முன்னிலை.
11.41 AM – கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு தினகரனை விட கூடுதலாக 19 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
11.33 AM – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 14,000 வாக்குகள் முன்னிலை.
11.31 AM – தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் தொடர்ந்து பின்னிலை.
11.30 AM – விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்கிறார்.
11.27 AM – கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை வகிக்கிறார்.
11.24 AM – காரைக்குடி தொகுதியில் நான்காவது சுற்று முடிவில் பாஜக பின்னடைவு,திமுக முன்னிலை.
11.22 AM – மதுரவாயல் தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவில் பெஞ்சமின் முன்னிலை வகிக்கிறார்.
11.20 AM – சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள 26 தொகுதியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
11.18 AM – மதுரை மேற்கில் செல்லூர் ராஜு பின்னடைவு.
11.16 AM – திருத்தணி தொகுதியில் 8வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக 10,097 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது.
11.15 AM – போடிநாயக்கனூர் தொகுதியில் ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைந்து வருகிறார்.
11.13 AM – எடப்பாடி தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 20,000 வாக்குகள் முன்னிலை.
11.11 AM – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 11,000 வாக்குகள் முன்னிலை.
11.09 AM – கொளத்தூர் தொகுதியில் 3ம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஸ்டாலின் 6000 வாக்குகள் முன்னிலை.
10.54 AM – விராலிமலையில் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தாமதம்.
10.50 AM – பெரும்பாலான தொகுதியில் திமுக, அதிமுகவிற்கு பின்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
10.44 AM – கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் விஜய்வசந்த் 12,636 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..
10.42 AM – போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
10.42 AM – கோவை தெற்கில் மீண்டும் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை.
10.42 AM – காட்பாடி தொகுதியில் திமுக பின்னடைவு..
10.42 AM – சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக முன்னிலை.
10.30 AM – கோவில்பட்டியில் டி.டி.வி தினகரன் முன்னிலை தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவு.
10.30 AM – கோவை தெற்கில் கமல்ஹாசன் பின்னடைவு.
10.20 AM – கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய் வசந்த் முன்னிலை, பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு.
10.17 AM – வாக்கு எண்ணிக்கை இயந்திரம் பழுதான காரணத்தினால் ஆயிரவிளக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.
10.14 AM – சென்னையில் உள்ள 16 தொகுதியில் திமுக முன்னிலை.
10.12 AM – திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக பின்னடைவு.
10.06 AM – கொளத்தூர் தொகுதியில் 2வது சுற்று முடிவில் திமுக ஸ்டாலின் முன்னிலை.
10.06 AM – எழும்பூர் தொகுதியில் திமுக முன்னிலை.
10.06 AM – பல்லடம் தொகுதி 3வது சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளர் முன்னிலை.
10.05 AM – சைதாப்பேட்டை தொகுதி 2வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை.
10.03 AM – ஆலந்தூர் தொகுதி 2வது சுற்று முடிவில் திமுக 3,642 வாக்குகள் முன்னிலை.
10.00 AM – காரைக்குடி தொகுதியில் எச்.ராஜா பின்னடைவு.
10.05 AM – சைதாப்பேட்டை தொகுதி 2வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை.
10.03 AM – ஆலந்தூர் தொகுதி 2வது சுற்று முடிவில் திமுக 3,642 வாக்குகள் முன்னிலை.
10.00 AM – காரைக்குடி தொகுதியில் எச்.ராஜா பின்னடைவு.
9.56 AM – ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் பின்னடைவு (703 வாக்குகள் பின்னிலை)
9.52 AM – திருவெறும்பூர் தொகுதியில் திமுக முன்னிலை.
9.52 AM – ஈரோடு கிழக்கு தொகுதி முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை.
9.49 AM – லால்குடி தொகுதியில் திமுக முன்னிலை.
9.49 AM – கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் பின்னடைவு.
9.45 AM – ஆர்கே நகர் முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை.
9.45 AM – பண்ருட்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் சிக்கல்.
9.39 AM – தாம்பரம் தொகுதி முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை (1001 வாக்குகள் வித்தியாசம்)
9.39 AM – திருவிக நகர் முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை (1517 வாக்குகள் வித்தியாசம்)
9.36 AM – திருவள்ளூர் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை( 223 வாக்குகள் வித்தியாசம்)
9.31 AM – பூந்தமல்லி தொகுதி முதல் சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை (2872 வாக்குகள் வித்தியாசம்)
9.31 AM திமுக 113 தொகுதியில் முன்னிலை.
9.31 AM அதிமுக 67 தொகுதியில் முன்னிலை.
9.29 AM – திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பின்னடைவு.
9.29 AM – திருவண்ணாமலை தொகுதி முதல் சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை.
9.23 AM – செங்கல்பட்டு தொகுதி முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை(1415 வாக்குகள் வித்தியாசம்)
9.23 AM – போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை.
9.23 AM திமுக 96 தொகுதியில் முன்னிலை.
9.23 AM அதிமுக 60 தொகுதியில் முன்னிலை.
9.17 AM மநீம 1 தொகுதியில் முன்னிலை.
9.08 AM விருதாச்சல தொகுதியில் பிரேமலதா பின்னடைவு.
9.08 AM அதிமுக கூட்டணி 30 தொகுதியில் முன்னிலை.
9.08 AM திமுக கூட்டணி 59 தொகுதியில் முன்னிலை.
9.08 AM கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலை.
9.01 AM தாராபுரம் தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் முன்னிலை.
9.01 AM குமாரபாளையம் தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் தங்கமணி முன்னிலை.
9.01 AM கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் பின்னடைவு.
9.01 AM கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கார்த்திக் முன்னிலை.
8.56 AM – திமுக கூட்டணி 24 இடங்களில் முன்னிலை.
8.52 AM – எடப்பாடி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை.
8.52 AM – கொளத்தூர் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் 667 வாக்குகள் பெற்று திமுக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் முன்னிலை.
8.49 AM – பூந்தமல்லி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை.
8.42 AM – விருகம்பாக்கம் தொகுதியில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை (திமுக – 110, அதிமுக – 38)
8.34 AM – திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையையொட்டி பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஊழியர்கள் எடுத்துவர தொடங்கினர்.
8.00 AM – தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
திருச்சி கிழக்கில் அதிமுகவின் வெல்லமண்டி நடராஜன் முன்னிலை வகித்து வருகிறார். குமாரபாளையத்தில் அதிமுகவின் பி.தங்கமணி முன்னிலை வகித்து வருகிறார். விருகம்பாக்கத்தில் திமுகவின் பிரபாகர் ராஜா முன்னிலை வகித்து வருகிறார். கடலூரில் அதிமுகவின் எம்.சி.சம்பத் முன்னிலை வகித்து வருகிறார். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார். தாராபுரத்தில் பாஜகவின் எல்.முருகன் முன்னிலை வகித்து வருகிறார். அரக்கோணத்தில் அதிமுகவின் சு.ரவி முன்னிலை வகித்து வருகிறார். ஆலங்குடியில் திமுகவின் சிவ.வி.மெய்யநாதன் முன்னிலை வகித்து வருகிறார். மதுரை மேற்கில் திமுகவின் சின்னம்மாள் முன்னிலை வகித்து வருகிறார். அவினாசி அதிமுகவின் தனபால் முன்னிலை வகித்து வருகிறார். விராலிமலை திமுகவின் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்து வருகிறார். விஜயபாஸ்கர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
திருச்சி கிழக்கில் அதிமுகவின் வெல்லமண்டி நடராஜன் முன்னிலை வகித்து வருகிறார். குமாரபாளையத்தில் அதிமுகவின் பி.தங்கமணி முன்னிலை வகித்து வருகிறார். விருகம்பாக்கத்தில் திமுகவின் பிரபாகர் ராஜா முன்னிலை வகித்து வருகிறார். கடலூரில் அதிமுகவின் எம்.சி.சம்பத் முன்னிலை வகித்து வருகிறார். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார். தாராபுரத்தில் பாஜகவின் எல்.முருகன் முன்னிலை வகித்து வருகிறார். அரக்கோணத்தில் அதிமுகவின் சு.ரவி முன்னிலை வகித்து வருகிறார். ஆலங்குடியில் திமுகவின் சிவ.வி.மெய்யநாதன் முன்னிலை வகித்து வருகிறார். மதுரை மேற்கில் திமுகவின் சின்னம்மாள் முன்னிலை வகித்து வருகிறார். அவினாசி அதிமுகவின் தனபால் முன்னிலை வகித்து வருகிறார். விராலிமலை திமுகவின் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்து வருகிறார். விஜயபாஸ்கர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
TN Election Result 2021 live - தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 நேரடி தகவல்கள்
Reviewed by Rajarajan
on
1.5.21
Rating:
கருத்துகள் இல்லை