Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு – வருமான வரித்துறை அறிவிப்பு!!




தற்போதைய கொரோனா இரண்டாம் அலையின் நெருக்கடியான சூழ்நிலையில் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக நடப்பாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கால அவகாசம் நீட்டிப்பு:

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கினால் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் நிறுவன தலைவர்கள் வருமான வரி செலுத்த ஆதரவாக நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் ஜூலை 31 ம் தேதியாக இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு, நேரடி வரி, வருமான வரிச் சட்டம், 1961 இன் 119 வது பிரிவின் கீழ் தனது தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தனது அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய இக்கட்டான நிலையில் இந்த கால அவகாசம் வரி செலுத்துவோருக்கு அவசியமானது என்று கிளியர்டாக்ஸின் நிர்வாக அதிகாரி ஆர்க்கிட் குப்தா கூறியுள்ளார்.


வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய கால அவகாசம்:

வழக்கமான வரி செலுத்துவோருக்கு, 2021-22 ம் ஆண்டிற்கான வருமான வருவாயை வழங்குவதற்கு 2021 ஜூலை 31 முதல் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய அக்டோபர் 31 ல் இருந்து நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாமதமாக தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31,2021ல் இருந்து ஜனவரி 31, 2022 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

பரிமாற்ற விலை நிர்ணய ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஃப்.டி பதிவு செய்வதற்கான கால அவகாசம் மே 31 ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

படிவம் 16 ஐ வழங்குவதற்கான கடைசி தேதி ஜூன் 15ல் இருந்து ஜூலை 15 வரை ஒரு மாத அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு – வருமான வரித்துறை அறிவிப்பு!! வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு – வருமான வரித்துறை அறிவிப்பு!! Reviewed by Rajarajan on 20.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை