தமிழகத்தில் முதியோருக்கான கட்டணமில்லா சேவை எண் அறிமுகம்!!
கொரோனா ஊரடங்கு காலத்தில் முதியோரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் எல்டர் லைன் (Elder Line) திட்டம் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவலினால் பொதுமக்கள் பல வகையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவற்றை சரி செய்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முக்கிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அமல்படுத்து வருகின்றது. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் உள்ள முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய சமூக நீதி அமைச்சகம் எல்டர் லைன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதற்கான அழைப்பு மையங்களை தமிழ்நாடு, உ.பி., ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அண்மையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து தெலுங்கானா மாநிலத்தில் இந்த வசதி செயல்பட்டு வருகிறது. 2021 மே மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை