தமிழகத்தில் மே மாத மின் கட்டணம் – நுகர்வோர் கணக்கிட அனுமதி!!
கொரோனா பரவலின் காரணமாக தற்போது தமிழகத்தில் நுகர்வோரே தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் என்று மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 2ம் அலை தாக்கத்தினால் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தாக்கத்தினால் பாதிப்படைந்து வருகின்றனர். அதே போல் பலி எண்ணிக்கை 300ஐ தாண்டி செல்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தமிழக அரசு மக்களுக்கு பல சலுகைகளையும் வழங்கி வருகின்றது.
அதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருக்கும் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா கால நிவாரண நிதியாக வழங்கப்பட இருக்கின்றது. முதல் தவணையாக 2000 ரூபாய் மக்களுக்கு இந்த மாதமே வழங்கப்பட்டு வருகின்றது. அதே போல் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது ஒரு பக்கம் இருக்க, மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கீடு செய்து கொள்ள மின் வாரியம் தற்போது அனுமதி அளித்துள்ளது. மக்கள் தங்களது மின் மீட்டரில் தற்போதைய அளவினை புகைப்படமாக எடுத்து அதனை மின்வாரிய பொறியாளருக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை மக்கள் வரவேற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை