12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வுகள் நடத்துவது குறித்து எந்த உத்தரவும் பிற பிறப்பிக்கவில்லை அரசு தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்!!
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வுகள் நடத்தப்படுவதால் ஏற்பட்டுள்ள குழப்பதிற்கு தமிழக அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அலகுத்தேர்வுகள்:
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தொற்றின் தீவிரம் குறைந்து நிலைமை சீரானதும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கல்வி டிவி வழியாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் நடத்தப்பட்டது.
தற்போது தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் பற்றிய குறிப்புகள், மாதிரி வினாத்தாள்களை ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப்பில் அனுப்புகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் மதுரை, திருவாரூர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் தேர்வுகள் நடத்தப்படுவது போன்ற பிம்பம் ஏற்படுகிறது. இதனால் தமிழக அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் இது குறித்து கூறுகையில், மாநிலம் முழுவதும் திருப்புதல் தேர்வுகள் மற்றும் அலகுத்தேர்வுகளை நடத்துவதற்கு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் அவர்களின் தனி ஆர்வத்தில் நடத்துகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வுகள் நடத்துவது குறித்து எந்த உத்தரவும் பிற பிறப்பிக்கவில்லை அரசு தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்!!
Reviewed by Rajarajan
on
20.5.21
Rating:
கருத்துகள் இல்லை