Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை



 கொரோனா நோய் தடுப்பு

மதுரை ‘சித்தர் வனம்' சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஜெய கல்பனா, கொரோனா நோய்த் தடுப்பு முறைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இதனைக் கண்டறிந்துள்ளார். இதனை, ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சென்னை ஐ.ஐ.டியின் ஆய்வகத்துறை இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

மூச்சுத்திணறல்

கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டியம் அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால் நுரையீரல் பை விரிவடைவதுடன், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாக அதிகரிப்பதை ஐஐடி நிபுணர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

எளிதாக செய்யலாம்

லிங்க முத்திரை மூலம் மனித உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வகையில், உடல் வெப்ப நிலை அதிகரித்து, இதயத் துடிப்பு மற்றும் நாடித்துடிப்புகள் சீராக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய மருத்துவர் கல்பனா, "மக்கள் எளிதாக தாங்களே ‘லிங்க முத்திரையை' செய்யலாம். இந்த முத்திரையைச் செய்வதன் முலம், உடலின் வெப்பம் அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பாற்றல் தூண்டப்பெற்று (activation of anti-viral innate immune response) கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் வருகிறது.

ஆக்ஸிஜன் அளவு உயரும்

ஆக்ஸிஜன் அளவு கணிசமாக உயர்ந்து, சுவாசம் சீராகிறது. பெருந்தொற்று காலத்தில், நோயாளிகளுக்கு, இந்த முத்திரை பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்" என்றார். சிறுவர்கள், முதியோர், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த லிங்க முத்திரையைச் செய்யலாம். கர்ப்பிணிகள் மட்டும் செய்யக்கூடாது. கொரோனாவிற்காக ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட எந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், செயற்கை ஆக்ஸிஜன் துணையுடன் இருந்தாலும்கூட இந்த முத்திரையைச் (Oxygen support) செய்யலாம்.

எப்படி செய்வது

உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். முதலில் ஆள்காட்டி விரலை மூக்கின் அடியில் வைத்து மூச்சை கவனிக்க வேண்டும். எந்த நாசி துவாரத்தில் குறைவான அளவு மூச்சு வருகிறது அல்லது அடைத்திருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள கையின் கட்டை விரலை செங்குத்தாக உயர்த்திப் பிடிக்க வேண்டும். மற்றொரு கையின் ஆள்காட்டி மற்றும் கட்டை விரலால், உயர்த்திப் பிடித்த கட்டை விரலின் அடியில் சுற்றி வளைத்து, இரு கைகளின் மற்ற அனைத்து விரல்களையும் கோர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் வெப்பம் அதிகரிக்கும்

இரு கைகளுக்கும் இடையே காற்று புகாதவாறு இறுக்கமாகப் பிடிக்க வேண்டும். இதை செய்யத் தொடங்கி, ஐந்தில் இருந்து நாற்பது நிமிடத்திற்குள் உடல் வெப்பம் அதிகரிக்கும். நெற்றி, மூக்கு, தொண்டை, நெஞ்சுப் பகுதி முழுதும் வெப்பம் அதிகரித்து வியர்க்கும்போது, முத்திரை செய்வதை நிறுத்திக் கொள்ளலாம். மருத்துவர் கல்பனா தொடர்புக்கு : 9585337331

கொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை கொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை Reviewed by Rajarajan on 8.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை