Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு...!

 



தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு ஆனது மேலும் ஒரு வார காலம் அதாவது ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவினை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்து உள்ளார்.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார். மேலும் ஆன்லைன், தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீட்டிற்கே நேரடியாக சென்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது உள்ளபடி காய்கறி, பழங்கள் வீடுகளுக்கு நேரடியாக வண்டிகள் வாயிலாக விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு...! தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு...! Reviewed by Rajarajan on 28.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை