கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் கண்பார்வை பறிபோகும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நேரத்தில், அதன் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு கண்பார்வை பறிபோகும் அபாயம் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலில் இருந்து மீண்டவர்களுக்கு கண் பார்வை பறிபோகும் நிலைமை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ICUவில் சிகிச்சை பெறுவோருக்கு கொரோனாவில் இருந்து மீண்டு வர அதிக சக்தி வாய்ந்த மருந்தான ஸ்டீராய்டு கொடுக்கப்படுகிறது.
இந்த ஸ்டீராய்டு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் என்னும் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இதனால் சிலருக்கு கண்பார்வை பறிபோவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடலில் சர்க்கரை அளவை இந்த பூஞ்சை அதிகரிப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டீராய்டு அதிகமாக வழங்கப்படுவதால் கண் வலி, வீக்கம், பார்வை இழப்பு ஏற்படும். பாதிப்பு அதிகரிக்கும் போது மூளையையும் பாதிக்கும். ஆரம்ப கட்டத்தில் கன்னம், கண் பகுதிகளில் வலி ஏற்படும், மூக்கிலிருந்து ரத்தம் ஏற்படும் இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் இல்லையேல் மூக்கில் பிரச்சினை ஏற்படும், சைனஸ் பிரச்சினை ஏற்படும். ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அடைப்பு ஏற்படும் பகுதிகளில் உறுப்புகள் செயலிழக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிலருக்கு இந்த பூஞ்சை தொற்று இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எதுவும் செய்வதில்லை. இந்த பூஞ்சை தொற்று மற்றவர்களுக்கு பரவாது. இந்த நோயின் அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுகி சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும், மருத்துவர் அனுமதி இல்லாமல் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது என்று மருத்துவர் ராயப்பா எச்சரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை